ARTICLE AD BOX
கொல்கத்தா: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதற்காக வருணுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. அதே போட்டியில் அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து இருந்தார். 8 சிக்ஸ் மற்றும் ஐந்து ஃபோர் அடித்திருந்தார். அவருக்கு கூட ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை. எனினும், வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்கள் வீழ்த்தியது அசாதாரணமானது என்பதால் அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி அதிரடியான ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். வருண் சக்கரவர்த்திக்கு கூட ஆட்டநாயகன் விருதை வழங்கி கூடாது, அபிஷேக் சர்மாவுக்கும் ஆட்டநாயகன் விருதை வழங்கி இருக்கக் கூடாது. மாறாக அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருதை வழங்கி இருக்க வேண்டும் என அவர் கூறி இருக்கிறார்.
இந்தப் போட்டியின் முதல் மூன்று ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் இரண்டு ஓவர்களை வீசி இங்கிலாந்து அணியின் முதல் இரண்டு விக்கெட்களை சாய்த்தார். அப்போது இருந்தே இங்கிலாந்து அணி சரிவை சந்திக்க தொடங்கியது. அதை சுட்டிக்காட்டி இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் அர்ஷ்தீப் சிங் தான். எனவே, அவருக்கு தான் ஆட்டநாயகன் விருது பெறும் தகுதி உள்ளது என பாஸித் அலி கூறி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "ஆட்டநாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டுமா? அல்லது வருண் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டுமா? என்ற விவாதம் நடந்து வருகிறது. ஆனால், அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் அந்த விருது பெறும் தகுதி இருப்பதாக நான் நம்புகிறேன்."
இதான் டா கம்பேக்.. மிரள வைத்த வருண் சக்கரவர்த்தி.. இந்திய அணியின் பெஸ்ட் ஸ்பின்னர் இவர்தான்
"அர்ஷ்தீப் சிங்கின் அதிக தாக்கம் நிறைந்த பந்துவீச்சு எதிரணியின் பேட்டிங் ஆர்டரை நிலைகுலைய வைத்தது. மூன்று ஓவர்களுக்குள் அவர் இந்த போட்டியை முடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். வருண் சக்கரவர்த்தி அற்புதமாக பந்து வீசி மூன்று விக்கெடுகளை வீழ்த்தினார். ஆனால், இரண்டு விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும் அர்ஷ்தீப் சிங்கின் பவுலிங் செயல்பாட்டை தான் அதிக சிறப்பானது என்று கூறுவேன்." என்றார் பாஸித் அலி.