எஸ்ஏ டி 20 தொடர்: டர்பனை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் வெற்றி

5 hours ago
ARTICLE AD BOX

டர்பன்: 6 அணிகள் பங்கேற்றுள்ள 3வது சீசன் எஸ்ஏ 20 தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. டர்பன் தரப்பில் அதிகபட்சமாக டி காக் 43 ரன்கள் எடுத்தார். பார்ல் ராயல்ஸ் தரப்பில் முஜீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பார்ல் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ருபின் ஹெர்மான் 44 ரன்கள் எடுத்தார். டர்பன் தரப்பில் ஜூனியர் டாலா 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

The post எஸ்ஏ டி 20 தொடர்: டர்பனை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article