ARTICLE AD BOX
தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன அறிவிப்பு என்னவென்றால் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் (Muthalvarin Kakkum Karangal Scheme) புதிதாக தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த திட்டம் எல்லோருக்குமானது அல்ல. அதனால், தமிழ்நாடு அரசு வழங்கும் ஒரு கோடி ரூபாய் தொழில் கடன் யார் பெற தகுதியானவர்கள், இந்த கடனுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 'முதல்வரின் காக்கும் கரங்கள்" (Muthalvarin Kakkum Karangal Scheme)எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " தமிழ்நாட்டைச் சார்ந்த வேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக 'முதல்வரின் காக்கும் கரங்கள்" எனும் புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அதன்படி தமது தாய் நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில், தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
அதன்படி,தொழில் தொடங்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரர் சார்ந்தோர்களுக்குத்திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் மறுமணம் செய்து கொள்ளாத கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்து வாழும் 25 வயதிற்குட்பட்ட திருமணமாகாத மகன், திருமணமாகாத மகள் மற்றும் கைம்பெண் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பதிவு செய்து மறுவேலை வாய்ப்பு பெறாமல் உள்ள, முன்னாள் படைவீரர்கள், படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் மறுமணமாகாத கைப்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்து வாழும் திருமணமாகாத மகன், மகள் மற்றும் கைம்பெண் மகள்கள் ஆகியோர் மேற்காணும் திட்டத்தில் தொழில் தொடங்கி பயனடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான வழி முறைகள்:
முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35, மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த கணவனை பிரிந்த மகள்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்த பட்ச வயதுவரம்பு 21 அதிகபட்சவயதுவரம்பு 55, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தல் வேண்டும், விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. மேலும் இது தொடர்பாக விண்ணப்பிக்க 26.02.2025 அன்று கீழ்கண்ட முகவரிக்கு நேரில் ஆஜராகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இடம்; கலையரங்கம், திருச்சிராப்பள்ளி, நாள்- 26.02.2025, நேரம்: 9.30 மணி" என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - TN Budget 2025: பட்ஜெட்டில் ஸ்டாலின் போடும் பலே திட்டம்... 2026 தேர்தலே டார்கெட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ