தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

4 hours ago
ARTICLE AD BOX

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு நவம்பரில் பாவிஷ் அகமது ஏற்றுக்கொண்டபின், அந்நிறுவனத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர் நஷ்டத்தை சரிகெட்டும் பணியின் ஒருபகுதியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஓலா இறங்கியுள்ளது. இந்த நிலையில், சுமார் 4,000 பேர் பணிபுரியும் ஓலா நிறுவனத்திலிருந்து 25 சதவீதம் பணியாளர்களை நீக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஆள்குறைப்பு நடவடிக்கை குறித்த தகவல் வெளியானதைத் ஓலா நிறுவனம் பங்குச் சந்தையில் ஓராண்டில் இல்லாத அளவாக நஷ்டத்தை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article