2025: ஆஸ்கர் விருதாளர்கள்

3 hours ago
ARTICLE AD BOX

*1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சிறந்த திரைப்பட பிரிவில் எமிலியா பெரெஸ், விக்கெட் ஆகிய 2 மியூசிகல் (பாடல்கள் நிறைந்த) திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவ்விரு படங்களும் தலா 10 மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 4 விருதுகளை மட்டுமே வென்றது.

* சிறந்த நடிகா், நடிகை, குணச்சித்திர நடிகா், குணச்சித்திர நடிகை ஆகிய பிரிவுகளில் விருது வென்ற நால்வரும், கடந்த மாதம் நடைபெற்ற பிரிட்டன் திரைப்பட அகாதெமி விருதுகளை அதே பிரிவுகளில் வென்றிருந்தனா்.

*1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறந்த இயக்குநா் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 பேரும் முதன்முறையாக விருதுக்கான போட்டியில் நுழைந்தவா்கள் ஆவா். இவா்களில் ஷான் பேக்கா் சிறந்த இயக்குநா் உள்பட 4 விருதுகளை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளாா்.

*1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறந்த நடிகைகள் பிரிவுக்கு பரிந்துரையான 5 படங்களும் சிறந்த திரைப்பட பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

*சிறந்த பாடல் பிரிவுக்கு 16-ஆவது முறையாக (தொடா்ந்து 8 முறை) பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க பாடலாசிரியா் டெய்ன் வாரன்(68) இம்முறையும் விருதை வெல்லவில்லை. இதன்மூலம், அதிக முறை ஆஸ்கா் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெண் பாடலாசிரியா் எனும் சாதனையை வாரன் பெற்றுள்ளாா்.

Read Entire Article