தொகுதி மறுசீரமைப்பு: வடமாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பது தமிழ்நாட்டிற்கு அநீதி - ஆ. ராசா

4 hours ago
ARTICLE AD BOX

தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்றும் வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி என்றும் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார்.

Advertisment

மேலும், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்று ஆ. ராசா கூறினார். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி உயருமா அல்லது விகிதாச்சார அடிப்படையில் உயருமா? என்று கேள்வி எழுப்பிய ஆ.ராசா, மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

அப்போது, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக ஆ. ராசா கூறியதாவது:

Advertisment
Advertisement

“தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கக்கூடாது. தொகுதி விகிதாச்சாரமா ? மக்கள் தொகை விகிதாச்சாரமா ? குழப்பமாக உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள பதில் குழப்பமாக உள்ளது. அவர் தெளிவான பதிலை அளிக்கவில்லை.

வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி. எங்களுடைய மக்களவை தொகுதி எண்ணிக்கை குறையக் கூடாது என்பது மட்டுமல்ல, எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துவிட்டு வடமாநிலங்களுக்கு மட்டும் அதிக எண்ணிக்கையில் கொடுத்தாலும் அநீதிதான்.” என்று ஆ.ராசா கூறினார். 

“மத்திய அரசு கூறியதை ஏற்று மக்கள் தொகை எண்ணிக்கையை குறைத்த தமிழ்நாட்டிற்கு தரும் தண்டனையா இது. மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு அதிக எம்.பி சீட்டுகள் கிடைக்கும். நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களுக்கு மட்டுமே அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் வளர்ச்சிப் பணிகளில் முன்னேறி இருக்கிறோம். பல்துறைகளில் தமிழ்நாடு நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இப்படி முன்னேறி இருக்கும்போது சட்டப்படி எங்களை தண்டிப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.” என்று ஆ. ராசா கூறினார்.

Read Entire Article