ARTICLE AD BOX
தேம்பி தேம்பி அழும் முகேஷ் அம்பானி.. பங்குகள் சரிவு, அரசின் நோட்டீஸ், சொத்து மதிப்பு சரிவு..!!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டணி நிறுவனங்களான பிபி எக்ஸ்ப்ளோரேஷன் (ஆல்பா) லிமிடெட் மற்றும் NIKO (NECO) லிமிடெட் ஆகியவற்றுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2.81 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 0.80 சதவீதம் சரிந்து 1161.70 ரூபாயாக உள்ளது. இதேபோல் கடந்த 6 மாதத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 23.38 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் ரிலையன்ஸ் பங்குகள் தற்போது 200-WMA அளவுக்குக் குறைவாக வர்த்தகமாகி வருகிறது.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) நிறுவனம் இயக்கும் எரிவாயு தொகுதிகளிலிருந்து, ரிலையன்ஸ் தலைமையிலான கூட்டமைப்பு இயக்கும் KG-D6 தொகுதிக்கு இயற்கை எரிவாயு இடம்பெயர்ந்தது தொடர்பான நீண்டகால பிரச்சனை நிலவி வந்த நிலையில் தற்போது, மத்திய அரசு தரப்பில் 2.81 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளது. ஆனால் முகேஷ் அம்பானி இத்தொகையைக் கொடுப்பாரா என்பது தான் முக்கியமான கேள்வி.
2018 ஆம் ஆண்டில், இந்திய அரசு KG-D6 கூட்டமைப்புக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆந்திராவில் இருக்கும் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையில் ONGC-யால் நிர்வகிக்கப்படும் பகுதிகளிலிருந்து எரிவாயு வளங்கள் இடம்பெயர்வதற்கு ரிலையன்ஸ் தலைமையிலான KG-D6 கூட்டமைப்பு தான் காரணம் என்று குற்றம் சாட்டியது.
இதன் மூலம் ONGC-க்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய பெட்ரோலியம் துறை அமைச்சகம் ஆரம்ப நிதி கோரிக்கை சுமார் 1.55 பில்லியன் டாலரை முன்வைத்தது. இந்த தொகை தற்போது 2.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பெட்ரோலியம் துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக நடந்த வந்த சட்ட போராட்டம் நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. இறுதியில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
2023 ஆம் ஆண்டு மே மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு அரசாங்கத்தின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு ஆதரவாக ஒரு நடுவர் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. இருப்பினும், அரசாங்கத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, அதே நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இந்த முடிவை ரத்து செய்தது, இது மார்ச் 3, 2025 அன்று நிகழ்ந்தது.
கடைசியாக வந்த தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக வந்த நிலையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இப்போது அதன் நிதி கோரிக்கையை 2.81 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.