ARTICLE AD BOX
SIP Vs FD.. இந்த 2 திட்டங்களில் எது சிறந்தது? SIP தொடங்க நினைப்பவர்கள் கண்டிப்பா நோட் பண்ணுங்க!
இப்போதெல்லாம் முதலீட்டாளர்களுக்கு எழும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சிறந்ததா? அல்லது பாரம்பரிய பிக்சட் டெபாசிட் முதலீடுகள் சிறந்ததா? என்பதுதான். இரண்டு திட்டங்களுமே ஒன்றுக்கொன்று அப்படியே நேர்மாறாக இருக்கும் என்று சொல்லலாம். எஸ்ஐபி திட்டத்தை பொறுத்தவரையில் குறுகிய காலத்தில் அதிக வருமானம் பெறலாம். ஆனால் இவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் பிக்சட் டெபாசிட்களில் போடும் முதலீட்டுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும்.
எஸ்ஐபி திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இதற்கு வருமானம் குறைவுதான் இருந்தாலும் பிக்சட் டெபாசிட்டில் போடும் பணத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இதில் போடப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும். அதோடு வட்டி வருமானமும் கிடைக்கும். இந்தப் பதிவில் எஸ்ஐபி முதலீடு சிறந்ததா? FD முதலீடு சிறந்ததா? என்பதைப் பார்ப்போம்.

SIP: எஸ்ஐபி என்பது சிறந்த முதலீட்டு முறை. நீண்ட காலத்திற்கு உங்கள் வருமானத்தை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழி. ஆனால் இவை சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம் என்பதால் அபாயமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தில் மாதம் தோறும், காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒரு முறை என உங்கள் வசதிக்கு ஏற்றார் போல் முதலீடு செய்யலாம். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்பவும் தொடங்கலாம். ஆரம்பத்தில் 500 முதல் எஸ்ஐபி முதலீடு செய்ய முடியும். காலப்போக்கில் உங்களுடைய முதலீட்டை அதிகரிக்கலாம்.
எஸ்ஐபி-யில் முதலீடு செய்வதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள்: எஸ்ஐபி திட்டம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்று முன்பே பார்த்தோம். ஒரு பண்டின் செயல் திறன் மற்றும் சந்தை நிலைமையை பொறுத்து உங்கள் முதலீட்டின் மதிப்பு குறையலாம்.. அதேபோல நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் விரைவான லாபம் ஈட்ட எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த ஆப்ஷன் அவ்வளவு நன்மை வழங்குவதாக இருக்காது. குறுகிய காலத்திற்கு வருமானமும் குறைவாக இருக்கலாம்.
பிக்சட் டெபாசிட்: இது பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான முதலீட்டு முறையாகும். இதில் உங்கள் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு டெபாசிட் செய்ய வேண்டும். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களிலும் பிக்சட் டெபாசிட்கள் கிடைக்கிறது. மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்தால் உங்களுடைய பணத்திற்கு வட்டி வருமானம் கிடைக்கும். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தை பொருத்து வட்டி மாறுபடலாம்.
பிக்சட் டெபாசிட் முதலீடு செய்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள்: பிக்சட் டெபாசிட்களை பொறுத்தவரையில் இதில் கிடைக்கும் வருமானம் மற்ற விருப்பங்களை விட கண்டிப்பாக குறைவு. இது தவிர முதிர்வு காலத்திற்கு முன்பே உங்கள் தொகையை திரும்ப பெற்றால் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் எஸ்ஐபி திட்டங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
மேலே இரண்டு திட்டங்களைப் பற்றியும் பார்த்தோம். இரண்டு திட்டங்களுமே குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏற்றது. ஒரு சிலர் பாரம்பரிய முதலீட்டை விரும்பலாம். சிலருக்கு ரிஸ்க் எடுக்க தோணாது. இது போன்ற நபர்கள் FD முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம். அதுவே ரிஸ்க் எடுப்பவர்கள் அதிக லாபம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எஸ்ஐபி சிறந்தது. எனவே எந்த ஒரு முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.