ARTICLE AD BOX
H Raja News: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா திருச்சி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கல்வியை கொடுக்க வேண்டும் என்பது இந்த தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
H Raja News: 'திமுகவின் பருப்பு இனிமேல் வேகாது'
இன்று தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வெறும் பேசும் மொழியாக மாற்றுவது இந்த திராவிடம் மட்டுமே. தமிழ்நாட்டின் முதல்வர் எங்களை பொறுத்தவரை இருமொழி கொள்கை மட்டுமே என்று சொல்கிறார். ஆனால் அவர்களுடைய குடும்பத்தார்கள் நடத்தும் தனியார் பள்ளியில் மூன்றாவது மொழியாக எதை வைத்துள்ளார்கள்.
தேசிய கல்விக் கொள்கையின் படி, கல்வியாளர்களை குழுவாக அமைத்து பல கட்ட ஆலோசனை செய்த பிறகு இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணைப்பு இல்லை, தமிழ்நாட்டில் நாடகம் போடுகிறார்கள். திமுகவின் பருப்பு இனிமேல் வேகாது. கல்விக் கொள்கையை சொல்லி தமிழ்நாட்டின் மக்களை ஏமாற்ற முடியாது, இனி அரசியல் செய்ய முடியாது.
H Raja News: தோற்றுப் போன ஒரு அரசு திமுக
தமிழ்நாட்டில் திமுக வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. தமிழ்நாட்டு முதல்வருடைய குடும்பம் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளை மூட முடியுமா? அல்லது அங்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியுமா?. தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளின் படிக்கக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் என்ன?.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை தொழிலாளி குழந்தை ஏன் 3 மொழிகளையும், பாடங்களையும் கற்றுக் கொள்ளக் கூடாது. மத்திய அரசு வழங்கும் நிதிகளை அதற்கான உரிய திட்டங்களுக்கு செயல்படுத்தவில்லை, ஆனால் மத்திய அரசை குறை கூறுவதையே வாடிக்கையாக திமுக அரசு வைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.
தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சருக்கே மாணவர்கள் மீது அக்கறை இல்லை. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷின் மகன் எந்த பாடமொழியை கற்றுக் கொள்கிறார்?. தமிழ்நாட்டில் எல்லா விதத்திலும் தோற்றுப் போன ஒரு அரசு திமுக. தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள் பெண்களுக்கு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் பழக்கம், புழக்கம் அதிகமாக உள்ளது.
H Raja News: தமிழ் மொழியை அழித்ததே திராவிடம் தான்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் தமிழ்நாட்டை ரூ.5 லட்சம் கோடி கடனாக மாற்றி உள்ளது. மக்களே திசை திருப்புவதற்காக நேற்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று பாஜக சார்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சர்வாதிகார போக்கு நடைபெறுகிறது. ரஷ்யாவில் இருந்த ஸ்டாலின் அரசாங்கம் மாதிரி , தற்போது தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சி உள்ளது.
அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை கொடுப்பதில் என்ன தயக்கம். அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை ஏன் உயர்த்த முடியவில்லை, தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. தமிழ் மொழியை அழித்ததே திராவிடம் தான். திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ் மொழிக்காக என்ன செய்தார்கள்?. தேசிய கல்விக் கொள்கையில் முதலில் தாய்மொழி கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
H Raja News: ஸ்டாலின் நல்லவரா...?
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று மூன்று மொழி அல்ல, பத்து மொழியில் கூட எனது மாநில மக்கள் கற்றுக் கொள்ளட்டும். அதற்கு நான் அனுமதிக்கிறேன் என்று சொன்னார். அதுதான் நாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். தமிழ்நாட்டின் முதல்வர் நல்லவரா? அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் அவர்களுக்கு வேண்டிய குழந்தைகள் அனைவரும் அனைத்து மொழியிலும் கற்றுக் கொள்ளலாம். ஏழை தொழிலாளி குழந்தைகள் எதையும் கற்றுக் கொள்ளக் கூடாது என நினைப்பவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்.
H Raja News: ஸ்டாலினுக்கு தகுதி இல்லை
தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளிலும் கணினி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. மத்திய அரசு வழங்கும் அனைத்து நிதிகளிலும் முறைகேடுகள் நடக்கிறது. பாஜக சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பேசுவார்கள். தமிழ்நாடு முதல்வர் உறவினர்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தினால், இவர் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ் மொழியைப் பற்றி பேசுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.
பிரதமர் எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசுகிறார். ஆனா தமிழ் மொழியை வளர்க்க திமுக அரசு என்ன செய்தது?. தமிழ் மொழிக்காக எதையும் செய்யாத ஒரே அரசு திமுக அரசுதான். மொழிப்போர் தியாகிகள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒருவருக்கு கவுன்சிலர் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளதா?. மொழிப்போர் தியாகிகள் குடும்பங்களில் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாமே?. மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களுக்கு திமுக அரசு என்ன செய்தது" என்றார்.
மேலும் படிக்க | ஜெர்மனியில் தமிழர்களுக்கு வேலை-மாத சம்பளம் 2 லட்சம்!! விண்ணப்பிப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ