தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது மத்திய பாஜக அரசு: கனிமொழி

2 hours ago
ARTICLE AD BOX

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தென் மாநிலங்களின் குரலை மத்திய பாஜக அரசு நசுக்கத் திட்டமிடுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் முன்னகர்த்தி வரும் பாஜகவின் நீண்ட கால செயல்திட்டம்தான் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு.

பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது ஆளும் மத்திய பாஜக அரசு.

மத்திய அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் முன்னகர்த்தி வரும் பாஜகவின் நீண்ட கால செயல்திட்டம் தான் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு.

பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும்… https://t.co/Ur9ziTYmq2

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 25, 2025

முன்னதாக, 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 8 தொகுதிகளை நாம் இழக்க நேரிடும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

மேலும் மார்ச் 5 ஆம் தேதி இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது பதிவில்,

'தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?

இதையும் படிக்க | இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?

Read Entire Article