ARTICLE AD BOX

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ் தோனி. கடந்த வருட ஐபிஎல்லின் பொழுது தோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்ராஜ் பொறுப்பேற்றா.ர் இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு கைமாறியது குறித்து ருத்துராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது கடந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எம்.எஸ் தோனி என்னிடம் வந்து இந்த ஆண்டு நான் அணியை வழிநடத்த போவதில்லை. நீ தான் கேப்டன் என்றார்.
முதல் ஆட்டத்திலிருந்து நான் தான் வழி நடத்த வேண்டுமா? என்று கேட்டதற்கு இது உன்னுடைய அணி., நீதான் சொந்த முடிவை எடுக்க வேண்டும். நான் இதில் தலையிட மாட்டேன் என்றார். பீல்டிங்கில் 50 சதவீதம் நீயும் 50 சதவீதம் நானும் பார்த்துக் கொள்ளலாம். இருந்தாலும் என் அறிவுரையை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றார். அந்த நம்பிக்கை மிகப்பெரியது” என்று பகிர்ந்துள்ளார்.