திருவண்ணாமலை கோயிலில் வேலை.. 109 பணியிடங்கள்! அரசு வேலை கனவில் இருப்பவர்களுக்கு செம சான்ஸ்!

4 hours ago
ARTICLE AD BOX

திருவண்ணாமலை கோயிலில் வேலை.. 109 பணியிடங்கள்! அரசு வேலை கனவில் இருப்பவர்களுக்கு செம சான்ஸ்!

Jobs
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலியாக 109 பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதம் இன்றி உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் காலியாக உள்ள அலுவல் பணியிடங்கள் என பல்வேறு பணியிடங்களை இந்து சமய அறநிலையத்துறை நிரப்பி வருகிறது. அரசு வேலை, உள்ளூரிலேயே வேலை பார்க்க வாய்ப்பு ஆகிய காரணங்களால் அறநிலையத்துறை வெளியிடும் அறிவிப்புகளை வேலை தேடும் தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

job Jobs Employment

அந்த வகையில் திருவண்னாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள 109 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைய உள்ளது.

பணியிடங்கள் விவரம்:

டைப்பிஸ்ட்- 01
வாட்ச்மேன் - 70
கூர்க்கா - 02
ஏவலால் (பண்ணை சாகுபடி) - 02
உப கோவில் பெருக்குபவர் - 02
கால்நடை பராமரிப்பு - 01
உப கோயில் வாட்ச்மேன் - 02
திருமஞ்சனம் - 03 பதவிகள்
முறை ஸ்தானிகம் - 10 பதவிகள்
ஓடல் - 02 பதவிகள்
தாளம் - 03
தொழில்நுட்ப உதவியாளர் (TA) (மின்னணுவியல் மற்றும் தொடர்பு) - 01
பிளம்பர் - 04 பதவிகள்
உதவி எலக்ட்ரீஷியன் - 02
தலைமை ஆசிரியர் - 01
தேவாரம் ஆசிரியர் - 01
ஆகம ஆசிரியர் - 01 என மொத்தம் 109 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

கல்வி தகுதி:

டைப்பிஸ்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் டைப்பிங் முடித்து இருக்க வேண்டும்.
காவலர், கூர்கா, ஏவலாள், கோயில் பெருக்குபவர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும். தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

பிளம்பர் பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குழாய் பணியாளர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?:

தட்டச்சர் - ரூ. 18,500 முதல் 58,600
காவலர் - ரூ. 15,900 முதல் 50,400
ஆகம ஆசிரியர் - ரூ. 35,900 முதல் 1,13,500
தொழில் நுட்ப உதவியாளர் - 20,600 முதல் 65,500 வரை
சங்கீத இசை ஆசிரியர் - 35,400 முதல் 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

இதர விவரங்கள்:

* விண்ணப்பதாரர்கள் 01.07.2024 தேதியில் 18-வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியம்.
* இந்து சமயத்தை சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
* காவலர் பணியிடத்தில் 60 பணியிடங்கள் ஆண்களுக்கும், 10 பணியிடங்கள் பெண்களுக்கும் நியமனம் செய்யப்பட உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.. பி.இ முடித்தவர்களுக்கு சான்ஸ்.. விண்ணப்பிப்பது எப்படி?
தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.. பி.இ முடித்தவர்களுக்கு சான்ஸ்.. விண்ணப்பிப்பது எப்படி?

* நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியில்லாத விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வராது.
* தேர்வு முறையானது அடிப்படை கல்வி தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
* விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் https;// annaamalaiyar. hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கோவில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 கோவை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி தான்.. ரூ.57 ஆயிரம் சம்பளம்!
கோவை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி தான்.. ரூ.57 ஆயிரம் சம்பளம்!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
திருவண்ணாமலை - 606 601. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை.. டிகிரி + தமிழ் தெரியுமா? உடனே அப்ளை பண்ணுங்க.. ப்ரஷர்களுக்கு சான்ஸ்!
பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை.. டிகிரி + தமிழ் தெரியுமா? உடனே அப்ளை பண்ணுங்க.. ப்ரஷர்களுக்கு சான்ஸ்!

விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று பிற்பகல் 05.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே அவகாசம் இருப்பதால் இதுவரை விண்ணப்பிகாதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

தேர்வு அறிவிப்பை படிக்கவும் இங்கே கிளிக் செய்யவும் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/195/document_1.pdf

More From
Prev
Next
English summary
The Hindu Religious and Endowments Department has issued a notification to fill 109 vacant posts in the Arunachaleswarar Temple, Tiruvannamalai. There is only 3 days left to apply for these posts. Therefore, eligible and interested applicants should apply immediately without delay.
Read Entire Article