ARTICLE AD BOX

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரத்னேஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். டாக்டரான ரத்னேஷுக்கு கடந்த 12ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் திருமணமான 10 நாட்களில் புதுபெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக எனது கணவர் வீட்டிற்கு சென்றேன். ஆனால் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைபடுத்துகின்றனர். கடந்த 19-ஆம் தேதி எனது கணவருடன் தேனிலவுக்காக கோவா சென்றேன்.
அங்கு நள்ளிரவு நேரம் அறையில் வைத்து என் கணவர் என்னை கடுமையாக தாக்கினார். எனது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து எனது பெற்றோரிடம் கூறிய பிறகு அவர்கள் வந்து என்னை அழைத்து சென்றனர். எனவே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் உள்பட ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.