ரூ.60,000-க்கு குழந்தையை விற்க முயன்ற 4 பேர் கைது!

2 hours ago
ARTICLE AD BOX

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தும்கூர் மாவட்டத்தின் குனிகல் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கடந்த பிப்.20 அன்று பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகாத அந்த பெண்ணின் குழந்தையின் தந்தையான மங்காடி தாலுக்கை சேர்ந்த ஸ்ரீநந்தாவுடன் சேர்ந்து தங்களது குழந்தையை விற்க முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளாரன ஜோதி என்பவருடன் இணைந்து அந்த பச்சிளம் குழந்தையை முபாரக் பாஷா எனபவருக்கு ரூ.60,000க்கு விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பல்கலைக்கழக விடுதியில் உணவருந்திய 50 மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு!

இதையறிந்த அம்மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் உயர் அதிகாரியான ஹுச்சா ரங்கம்மா என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இந்த குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article