ARTICLE AD BOX
தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என நடிகை ஜோதிகா வருத்தம் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்து அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் சூர்யாவின் பெற்றோருக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி இல்லை என்றாலும் தற்போது ஜோதிகா குறித்து சிவகுமார் பல இடங்களில் பெருமையாக பேசி இருக்கிறார். திருமணத்திற்கு முன் மிகவும் சுறுசுறுப்பாக நடித்து வந்த அவர் அதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
அதிலும், சில நடிகர்களை வேண்டும் என்றே அவர் காதலிக்கும் போது கூட தவிர்த்து வந்தார். சர்ச்சைக்குரிய நடிகர்களுடன் அவர் நடித்ததால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டதாக கூட அப்போதைய செய்திகள் தெரிவித்தன. குடும்பம், குழந்தை என்று இருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இதையும் படிங்க: "வாய்ப்பு வேணுமா? நான் சொல்வதை கேளு" - நடிகை கூறிய தகவல்.. ஷாக்கில் திரையுலகம்.!
ஆனால் அவருக்கு பழையபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜோதிகா பேசியபோது, " கே.பாலச்சந்தர் போல பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களை யாரும் இப்போது முன்னெடுப்பதே இல்லை. அவர் போன்ற இயக்குனர்கள் தற்போது இல்லை. குழந்தை பிறந்த பின் பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை." என்று வேதனையாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் "தனம் அண்ணி"யா இது.?! வாலி படத்தில் எப்படி இருக்காங்க பாருங்க.!