ARTICLE AD BOX
சென்னை,
பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி-காட்பாடி இடையிலான மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"திருப்பதியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை இரவு 7.10 மணி புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, காட்பாடியிலிருந்து இன்று முதல் 8-ந் தேதி வரை காலை 6.10, மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் ரெயில்களும், மறுமார்க்கமாக அதே தேதிகளில் திருப்பதியிலிருந்து காலை 10.35 மணிக்கு காட்பாடி செல்லும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
காட்பாடியில் இருந்து நாளை முதல் 9-ந் தேதி வரை காலை 10.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் ரெயிலும், காட்பாடியில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் ரெயிலும், ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12.55 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் ரெயில்களும் ரத்து செய்யப்படும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.