சீமான் வழக்கில் கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை: டிடிவி தினகரன் கருத்து

1 day ago
ARTICLE AD BOX

திருச்சி: சீமான் வழக்கில் கோர்ட் உத்தரவுப்படி போலீசார் செயல்படுகின்றனர் என்று டிடிவி தினகரன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பொருளில் அனைத்து கட்சி கலந்தாலோசனை கூட்டம் கூட்டப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளார். அந்த கூட்டத்தில் தொகுதி சீரமைப்பு குறித்தே பேச வேண்டும். மும்மொழி கொள்கை குறித்து பேசினால் அது பொருத்தமாக இருக்காது. எங்கள் கட்சிக்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது.

எங்கள் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் கலந்து கொள்கிறார். சட்டமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சிக்குரிய பலத்துடன் செயல்படுகிறாதா? என்றால் இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று துணிச்சலாக இபிஎஸ் செயல்படவில்லை. சீமான் வழக்கில் கோர்ட் உத்தரவுப்படி போலீசார் செயல்படுகின்றனர். கோர்ட் உத்தரவுக்கு நீங்களாக இருந்தாலும், நானாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாரிசாக கூறிக்கொள்ளும் சீமானும் கோர்ட் உத்தவுக்கு கட்டுப்பட்டவர்தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சீமான் வழக்கில் கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை: டிடிவி தினகரன் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article