திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி: 921 கிராம் தங்கம் குவிந்தது

1 day ago
ARTICLE AD BOX

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 28 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1.59 கோடி வசூலாகியுள்ளது. மேலும் 921 கிராம் தங்கம், 11 ஆயிரம் கிராம் வெள்ளியும் குவிந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் உண்டியல்களில் நகை, பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

அதன்படி கடந்த 28 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் வசந்த மண்டபத்தில் காணிக்கை எண்ணப்பட்டது. கோயில் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நேற்று காலை முதல் மாலை 7 மணி வரை கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

இதில், உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சத்து 71 ஆயிரத்து 698 ரூபாய், 921 கிராம் தங்கம், 11,012 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தைமாத செவ்வாய்க்கிழமைகள் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 28 நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் உண்டியல் காணிக்கை வசூல் ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி: 921 கிராம் தங்கம் குவிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article