ARTICLE AD BOX
![](https://rockforttimes.in/wp-content/uploads/2025/02/th_4-copy-3-12.jpg)
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அகலங்கநல்லூர் பகுதியில், புதைக்கப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக லால்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை தோண்டி எடுத்து பார்வையிட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடயவியல் குழுவினர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த லால்குடி போலீசார் இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார் ? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருச்சி, லால்குடி அருகே புதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் போலீசார் விசாரணை ! appeared first on Rockfort Times.