திருச்சி,திருவெள்ளறை புண்டரீகாட்சப்பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா !

5 hours ago
ARTICLE AD BOX

திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறையில் பல ஆண்டுகளுக்குப்பின் இன்று மீண்டும் தெப்போற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயிலின் சார்புக்கோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப்பெருமாள் கோயில் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றாகும். பழமையும், பெருமையும் கொண்ட இக்கோயில் மன்னர்கால பிரமாண்ட கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரால் பாடல்பெற்ற தலம், இக்கோயிலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயிலில் நடப்பதுபோன்றே உற்சவங்கள், விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு தெப்பமண்டபம் இருந்தும் தெப்போற்சவம் மட்டும் நடைபெறாமல் இருந்தது.

மாற்று மதத்தவர் படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களினால் சென்ற நூற்றாண்டிலிருந்தே இங்கு தெப்ப உற்சவம் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் நன்கொடையாளர்களின் உதவியாலும் உள்ளூர்மக்களின் முயற்சியாலும், கோயிலில் தெப்பக்குளம் இருந்த இடம் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு நேற்று பல நூறாண்டுகளுக்குப்பின் தெப்போற்சவம் நடந்தது. இந்த தெப்பத்தில் உற்சவர் செந்தாமரைக்கண்ணன் பங்கஜவல்லித்தாயாருடன் எழுந்தருளி உலாவந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். சுற்றுப்பகுதி கிராம மக்களும், திரளான பக்தர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயில் இணை ஆணையரும், நிர்வாக அதிகாரியுமான மாரியப்பன் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யர்கள் மற்றும் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post திருச்சி,திருவெள்ளறை புண்டரீகாட்சப்பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா ! appeared first on Rockfort Times.

Read Entire Article