திருச்சி,ஜோசப் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல் …( வீடியோ இணைப்பு)

3 hours ago
ARTICLE AD BOX

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே 160 ஆண்டுகள் பழமையான செயின்ட் ஜோசப் கல்லூரி செயல்பட்டு வருகிறது . இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மாணவர்களுக்கிடையதகராறு ஏற்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, கல்லூரி வாசலில் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி,ஜோசப் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல் …( வீடியோ இணைப்பு) appeared first on Rockfort Times.

Read Entire Article