ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ட்ரெயின், காந்தி டாக்ஸ், ஏஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய் சேதுபதி, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கிருத்திகா உதயநிதியிடம் விஜய் சேதுபதி கதை கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் விஜய் சேதுபதி, இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை நடிகை நயன்தாரா தயாரித்து இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறார் எனவும் சொல்லப்பட்டது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி, ஆறு, சிங்கம், பூஜை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே விஜய் சேதுபதி, ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படமும் அதேபோல் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இவர்களது கூட்டணியிலான புதிய படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை எனவும் இப்படம் கைவிடப்பட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.