ARTICLE AD BOX

வானமே கூரையாகக் கொண்டு அமர்ந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளும் திருச்சி வெக்காளியம்மன் உறையூரின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறார். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியிடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை பயபக்தியுடன் தரிசித்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா மார்ச் 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு தொடங்குகிறது. அப்போது மேளதாளங்கள் முழங்க கோயில் நிர்வாகம் சார்பில் கொண்டு வரப்படும் பூக்களால் அம்மனுக்கு சாற்றப்பட்டு அர்ச்சனை செய்யப்படும். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள் அம்மனுக்கு சாற்றப்படும். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இதேபோல பக்தர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் கொண்டு வரும் பூக்களும் அம்மனுக்கு சாற்றப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
The post திருச்சி, உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…! – மார்ச் 21ம் தேதி தொடங்குகிறது appeared first on Rockfort Times.