படிக்கட்டு பயணத்தால் சோகம்; கல்லூரி மாணவர் இரயில் இருந்து தவறி விழுந்து பலி.!

15 hours ago
ARTICLE AD BOX

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் விஷ்வா (வயது 20). இவர் மீனம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தனியார் கல்லூரியில், பிஏ துறையில் கிரிமினாலஜி, மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

தினமும் கல்லூரிக்கு சென்று வர, மின்சார இரயிலை பயன்படுத்துவது வழக்கம். நேற்று மாணவர் விஷ்வா வழக்கம்போல கல்லூரி செல்ல திருமால்பூர் - கடற்கரை இடையே பயணிக்கும் விரைவு மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளார்.

விரைவு இரயிலில் பொதுவாக கூட்டம் அதிகமாக இருக்கும். சம்பவத்தன்றும் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் படியில் தொங்கியபடி மாணவர் பயணித்தார். தாம்பரம் இரயில் நிலையம் வந்தபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதையும் படிங்க: 2 வயது சிறுமிக்கு எமனான மாடிக்கம்பி படிக்கட்டு.. தவறி விழுந்து துள்ளத்துடிக்க குழந்தை பலி.. தாம்பரத்தில் சோகம்.!

இதனால் படுகாயமடைந்த விஷ்வா, தலையில் காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: பெண்களுக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு தர்ம அடி.. இரயில் பயணத்தில் சம்பவம்.!

Read Entire Article