தியேட்டரில் மரண அடி கொடுத்த டிராகன் படத்துக்கு போட்டியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நீக்!

3 hours ago
ARTICLE AD BOX

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அது எந்த தளத்தில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

Nilavuku En Mel Ennadi Kobam OTT Release : தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்தது. இப்படம் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகும் முன்னர் பலரும் நீக் படத்தை பாராட்டி இருந்தனர். ஆனால் படம் ரிலீஸ் ஆன பின்னர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து படு தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி இதற்கு போட்டியாக வந்த டிராகன் வேறலெவலில் இருந்ததால் நீக் படம் ஒரே வாரத்தில் தியேட்டரில் இருந்து வாஷ் அவுட் ஆனது.

NEEK Movie

நீக் படத்தில் தனுஷ் ஒரு பாடல் காட்சியில் மட்டும் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்திருந்தார். இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், ராபியா, வெங்கடேஷ் மேனன், அன்பு, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரைக்கதை முழுவதையும் தனுஷ் தான் எழுதி இருந்தார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்... அட்ராசக்க; தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே பாஸ்!

NEEK Movie OTT Release

தனுஷின் நீக் திரைப்படம் வெறும் ரூ.7.12 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நீக் திரைப்படம் வருகிற மார்ச் 21ந் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

Dhanush

நீக் படத்திற்கு முன்னதாக தனுஷ் கடைசியாக இயக்கி நடித்த படம் ராயன். உலகளவில் ராயன் படம் 150 கோடிக்கு மேல் வசூலித்தது. ராயன் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானபோதும் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷ் உடன் அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 

இதையும் படியுங்கள்... தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அழைத்த வெற்றிமாறன்; நோ சொன்ன சிறகடிக்க ஆசை நாயகி!

Read Entire Article