திருச்சி: 15 வயது சிறுமி பலாத்கார முயற்சி; 40 வயது கூலித் தொழிலாளி கைது.!

3 hours ago
ARTICLE AD BOX

வயது அப்பர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கருப்பூர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (40). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இதே பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, நடராஜன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் -கார் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி.. போதை அலட்சியத்தால் சோகம்.!

போக்ஸோவில் கைது

இந்த விஷயம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் துறையினர், நடராஜனை போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 
 

இதையும் படிங்க: திருச்சி: பெல் நிறுவனத்தில் சோகம்; துறை மேலாளர் மர்ம மரணம்.. காவல்துறை விசாரணை.!

Read Entire Article