ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் கடந்த நான்குஆண்டுகளில் மொத்த சாகுபடிப் பரப்பு 1.51 கோடிஏக்கராக அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதை வாசித்த துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இதைத் தெரிவித்தார்.
கடந்த 2019-20ஆம் ஆண்டில் 146 இலட்சத்து 77 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இது படிப்படியாக உயர்ந்து 2023-24ஆம் நிதியாண்டில் 151 இலட்சம் ஏக்கராக அதிகரித்தது என வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.