ARTICLE AD BOX
ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் திரைக்கு வந்த 'காதலிக்க நேரமில்லை' படம் வரும் 11ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
![பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம்](https://static-gi.asianetnews.com/images/01jj9fzk89aqk03rvw3pfzjkbc/ravi-mohans-kadhalikka-neramillais-collection-report-out.jpg)
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் 'காதலிக்க நேரமில்லை'. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
![நித்யா மேனன் மற்றும் ஜெயம் ரவி வெளியான காதலிக்க நேரமில்லை](https://static-gi.asianetnews.com/images/01jhszje93km4t19c4za1aa5am/ravi-mohans-kadhalikka-neramillais-collection-report-out.jpg)
கட்டிடக் கலைஞரான ஷ்ரியா (நிதியா மேனன்), தனது குடும்பத்தை மீறி தான் காதலித்தவரை தன்னுடைய விருப்பப்படி திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரது கள்ளக்காதல் பற்றி தெரியவரவே அவரிடமிருந்து பிரிந்து செல்கிறார். குழந்தைகள் என்றால் ரொம்பவே இஷ்டமாக கருதும் ஷ்ரியா IVF முறையை தேர்வு செய்து, இதன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்கிறார். பிரசவத்தின் போது அவருக்கு ஒரு கேள்வி எழுகிறது. நம்ம குழந்தைக்கு அப்பா யார் என்ற கேள்வி எழுகிறது.
அஜித் படத்தால் என் கேரியரே போச்சு; நம்பவைத்து ஏமாத்திட்டார் சிவா - நடிகை குமுறல்!
![](https://static-gi.asianetnews.com/images/01jk5nwvdx0kstcwydr9h2m4sc/jayam-ravis-kadhalikka-neramillai-ott-update-out.jpg)
அந்த குழந்தையின் அப்பாவை தேடி கண்டு பிடிக்க முயர்கிறார். இதே போன்று, மாடலிங் நிரூபமா (டி ஜே பானு) மற்றும் பொறியாளர் சித்து (ரவி மோகன்) இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். திருமணத்திற்கும் தயாராகிறார்கள். ஆனால், ரவி மோகனை திருமணம் செய்து கொள்ள பிடிக்காமல் அவர் வெளிநாடு சென்றுவிடுகிறார். இதற்கிடையில் சித்து மற்றும் ஷ்ரியா இருவரும் ஒருவருக்கொரு நெருங்கி பழகுகிறார்கள். விளையாட்டுக்காக தனது விந்தணுவை மருத்துவமனை பரிசோதனைக்குக் கொடுக்கிறார். அது தவறுதலாக ஷ்ரியாவின் IVFக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக ஷ்ரியாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது.
![](https://static-gi.asianetnews.com/images/01jh00x3rcawgzymb32dr3qa9n/jayam-ravis-kadhalikka-neramillai-film-updates-out.jpg)
அந்த குழந்தையின் மூலமாக ஷ்ரியா மற்றும் சித்து இருவரும் ஒன்று சேர்கிறார்களா? ஷ்ரியாவுக்கு சித்து தான் தன் குழந்தையின் தாய் என தெரிகிறதா? என்பதை விறுவிறுப்பாக கிருத்திகா காட்சி படுத்தி இருந்தாலும், ஏனோ சில மைனஸ் இந்த படம் ரசிகர்களுக்கு கன்டென்ட் ஆகவில்லை. இந்த படம் பெரியளவில் ஹிட் கொடுக்காமல் போனது.
3 படத்தில் ரூ.1600 கோடி வசூல்! அசர வைக்கும் தமிழ் நடிகை யார் தெரியுமா?
![நெட்பிலிக்ஸ் ஓடிடியில் காதலிக்க நேரமில்லை](https://static-gi.asianetnews.com/images/01jdbv27yhpqr22wmxmvs354be/befunky-collage--37-.jpg)
இந்திய அளவில் இந்தப் படம் ரூ.10 கோடி கூட வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான்,திரைக்கு வந்து ஒரு மாதமான நிலையில் இப்போது காதலிக்க நேரமில்லை ஓடிடியில் வெளியாக இருக்கிறது. வரும் 11 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.