ARTICLE AD BOX
செய்தியாளர்: காளிராஜன் த
திண்டுக்கல் அருகே வசிப்பவர் பாண்டிதுரை (30). மெக்கானிக் இன்ஜினியராக பெங்களூரில் பணிபுரிந்து வரும் இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்கு வந்த பாண்டிதுரை, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவி, நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சாணார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சாணார்பட்டி மகளிர் போலீசார் பாண்டிதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.