உலகில் அதிவேக ரயிலை கொண்டுள்ள நாடு எது தெரியுமா?

12 hours ago
ARTICLE AD BOX

உலகில் அதிவேகமான ரெயிலை இயக்கும் நாடு எது என்று கேட்டால் நம்மில் பலர் அது அமெரிக்கா அல்லது ஜப்பானாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அது தவறு. சீனாவில் தான் இந்த அதிவேக ரெயில் உள்ளது. தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் சீனா மற்ற நாடுகளுக்கு சவால் விடும் இடத்தில் உள்ளது. அந்த வகையில் உலகின் பல நாடுகளிலும் மணிக்கு 100 கி.மீ. தொலைவை மட்டுமே எட்டும் ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது, அதிவேக ரெயில்களை சீனா அறிமுகம் செய்து வருகிறது.

சீனா தற்போது அறிமுகம் செய்துள்ள அதிவேக ரெயிலின் பெயர் சி.ஆர் 450 (CR450). இந்த ரெயில் மணிக்கு 450 km/h (280 mph) வேகத்தில் அதிகபட்சமாக 400 km/h (249 mph) கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இது உலகின் அதிவேக ரெயிலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், 600 முதல் 1000 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கும் மக்களை ஈர்க்கும் வகையில் சி.ஆர்.450 அமைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.ஆர்.450 (CR450) அதன் சாதனை வேகம், செயல்திறன் மற்றும் பயணிகள் அனுபவத்திற்கு பங்களிக்கும் பல அதிநவீன கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியுள்ளது. CRRC (சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன்) வடிவமைத்து கட்டமைத்த CR450, சீனா ரெயில்வே ஹை-ஸ்பீட் (CRH) ஆல் இயக்கப்படும். முன்பு இதே ஸ்டைலில் வெளிவந்த ரெயிலைக் காட்டிலும் இதன் எடை 10 சதவீதம் குறைவு எனக்கூறப்படுகிறது.

சி.ஆர்.450 பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது. 450 கி.மீ. வேகத்தில் செல்லும்போதுகூட அலுங்காமல் குலுங்காமல் சொகுசு காரில் பயணிக்கும் அனுபவத்தை தரும் வகையில் இதன் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம். அவசர சூழலில் இந்த ரெயிலை நிறுத்த அதற்கு ஏற்றவாறு பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பிசினஸ் கிளாஸ், ப்ரீமியம் மற்றும் 2-ம் வகுப்பு என்ற பிரிவுகள் உள்ளது. நிரந்தர காந்த இழுவை மோட்டார்கள், பயணிகளுக்கு வசதியான கேபின்கள், வெளிப்புற சத்தம் குறைப்பு மற்றும் கார்பன் பைபர் போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு சி.ஆர்.450 ரெயில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

முக்கிய அமைப்புகளின் நிகழ்நேர கண்காணிப்புக்காக இந்த ரெயிலில் 4,000 க்கும் மேற்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டு இறுதியில் இந்த ரெயிலை சோதனையோட்டம் நடைபெற்ற நிலையில் பாதுகாப்பு, பர்ஃபார்மென்ஸ் உள்ளிட்டவை திருப்திகரமாக இருந்ததால் போக்குவரத்திற்காக இந்த ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.450 சீனாவின் புதுமை சார்ந்த மேம்பாட்டு உத்தியையும், ரெயில்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னம்பிக்கைக்கான அதன் உறுதிப்பாட்டையும் காட்டுகிறது.

எதிர்கால அதிவேக சொகுசு ரெயில் வடிவமைப்புக்கான முன்னோடி என்றும் இதனை கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
அதிவேக ஆற்றல் கொண்ட பிளாக் மாம்பா பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
china's high-speed train cr450
Read Entire Article