திருச்சியில் 150 போதை மாத்திரைகளுடன் 4 வாலிபர்கள் சிக்கினர்- 2 பேர் தப்பி ஓட்டம்…!

11 hours ago
ARTICLE AD BOX

திருச்சி, பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் முதலியார் சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் 6 பேர் அந்த வழியாக வந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்களில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த கவிபாரதி( 24 ), பிரகாஷ்வரன் (22), திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் ( 25 ), முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த தெய்வம் (30)என தெரியவந்தது. மேலும், அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தன. அதனை அவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

The post திருச்சியில் 150 போதை மாத்திரைகளுடன் 4 வாலிபர்கள் சிக்கினர்- 2 பேர் தப்பி ஓட்டம்…! appeared first on Rockfort Times.

Read Entire Article