தார்பாய் அமைக்கும் பணியில் சோகம்; ஒருவர் பலி., காப்பாற்ற முயன்ற 3 பேர் காயம்.!

2 hours ago
ARTICLE AD BOX

 

வீட்டின் மேற்கூரையில் வேலை பார்த்த நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர், வேலங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் வேங்கடராஜன் (வயது 55). இவரின் மனைவி வசந்தி. தம்பதிகளின் மகள் ரம்யா. 

இதையும் படிங்க: சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; 2 இளைஞர்கள் படுகொலை.!

நேற்று இவர்களின் வீட்டின் மேற்கூரையில், தார்பாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அச்சமயம், இடையூறாக இருந்த கேபிள் ஒயரை அகற்ற முற்பட்டுள்ளனர். 

மின்சாரம் தாக்கி சோகம்

அந்த நேரத்தில், கேபிள் ஒயரின் மீது உயர் மின்னழுத்த கம்பி உரசி இருக்கிறது. இந்த சம்பவத்தில் வேங்கடராஜனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேங்கடராஜனின் மனைவி வசந்தி, மகள் ரம்யா, இவர்களுக்கு உதவியாக இருந்த போலக்குடி தொழிலாளி பிரபு (வயது 41) ஆகியோர் படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்டனர்.  

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரபு உயிரிழந்தார். மேலும், பிற மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விஷயம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: திருச்சி: பேனர் வைத்தபோது சோகம்; புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மரணம்.! 

Read Entire Article