"அம்மா அந்த அங்கிள் என்னை அப்டி பன்னிட்டார்மா" 13 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்.! 

3 hours ago
ARTICLE AD BOX

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேனி எனும் கிராமத்தில் 41 வயதான சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி வேலை பார்த்து வரும் சரவணக்குமார் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அங்குள்ள உழவர் சந்தை பகுதிக்கு ஒரு 13 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அதற்கு பின்னும் அந்த சிறுவனை விடாது சரவணகுமார் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தாயிடம் கூறி கதறி அழுத்துள்ளார். சிறுவனுக்கு ஏற்பட்ட கொடுமைகளை கேட்டு தாய் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: தங்கையை கர்பமாக்க காரணமாக இருந்த அக்கா.! திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்.!

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து சரவணக்குமாரை போக்சோ சட்டத்தின் அடிப்படையில் கைது செய்து இருக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம்; மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கொடூர கணவன்.!

Read Entire Article