ARTICLE AD BOX
நிதித் திட்டமிடலின் ஒரு முக்கிய அம்சம் காப்பீடு ஆகும், இது எதிர்பாராத சூழ்நிலைகளை உங்கள் சேமிப்பைக் குறைக்காமல் கையாள உதவும் ஒரு பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது. பல்வேறு வகையான காப்பீடுகள் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. தேவையைப் பொறுத்து காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வகையில் பலரும் தவறு செய்யும் இடங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தனிப்பட்ட தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் காப்பீட்டை வாங்குவது அடிக்கடி நிகழும் தவறுகளில் ஒன்றாகும். எனவே, சவாலான காலங்களில் உங்களைப் பாதிக்காத பாலிசியை வாங்குவதற்கு, உங்கள் தேவைகள், இருப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி யோசித்து மதிப்பிடுவது செய்வது நல்லது.

உள்ளூர் காப்பீட்டு முகவரை முழுமையாக நம்பியிருப்பது தவறு. அவர்கள் உங்கள் தேவைகளை விட தங்கள் கமிஷனுக்கு முன்னுரிமை அளிக்கும் பாலிசிகளை உங்கள் தலையில் கட்டிவிடக்கூடும். எனவே, வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும். பல்வேறு கவரேஜ் ஆப்ஷன்கள், நன்மைகள் மற்றும் விலக்குகளை ஆராயவும். ஆன்லைனில் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டை பூர்த்தி செய்யும் பாலிசியைக் கண்டுபிடிப்பதற்கான எளிய வழி இது.

காப்பீட்டு ஒப்பந்தம் நல்லெண்ணக் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை நினைவில்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் காப்பீட்டாளரிடம் நேர்மையாக இருப்பது அவசியம் - முக்கிய விவரங்களை மறைப்பது, உங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பின்னர் கிளைம் செய்யும் உண்மை தெரியவந்தால் பாலிசி ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. புகைபிடித்தல் பழக்கம் உண்டா, மருத்துவ சிகிச்சை வரலாறு, கடந்தகால இன்சூரன்ஸ் கிளைம் போன்ற விவரங்களை மறைக்காமல் உண்மையைப் பதிவுசெய்ய வேண்டும்.

சிறிய விஷயங்களையும் பொறுமையாகப் படித்துப் பார்க்க நேரம் ஒதுக்குவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் பாலிசி என்னென்ன கவரேஜ் கிடைக்கும், என்னென்ன கவரேஜ் கிடைக்காது என்பதைப் புரிந்துகொள்வவது முக்கியம். பல்வேறு நன்மைகள் பற்றிய விவரங்களைப் படித்துத் தெரிந்துகொண்டால் பாலிசியின் முழு பயனையும் அனுபவிக்கலாம். எனவே எந்தவொரு பாலிசியையும் இறுதி செய்வதற்கு முன் நன்றாகப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

பலர் பணத்தை மிச்சப்படுத்த மலிவான பாலிசியைத் தேர்வு செய்கிறார்கள். இதனால் அத்தியாவசியமான காப்பீட்டைத் தியாகம் செய்ய வாய்ப்புள்ளது. குறைந்த விலை மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுத்தால், பிற்காலத்தில் மருத்துவச் செலவை எதிர்கொள்ளும்போது செலவுகளில் பெரும் பகுதியைச் சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும். அதற்கு பதிலாக, போதுமான அளவுக்கு கவரேஜ் கொடுக்கும் பாலிசியைத் தேடுங்கள்.

வாழ்க்கை மாற்றங்களும் உங்கள் காப்பீட்டுத் தேவைகளும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். உதாரணமாக, உங்கள் வீட்டு காப்பீட்டுக் கொள்கை அதன் புதிய மதிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்தப் புதுப்பிப்புகளை காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவிக்கத் தவறினால், எதிர்காலக் கிளைம்கள் மறுக்கப்படலாம். எனவே உங்கள் பாலிசிகளை வழக்கமான இடைவெளியில் மதிப்பாய்வு செய்வது அவசியம்.

காப்பீட்டை வாங்குவது மட்டும் போதாது - உரிமைகோரல் செயல்முறையைப் புரிந்துகொள்வதும் மிக முக்கியம். "ஒரு குடும்பம் ஒரு சுகாதார அவசரநிலையைச் சமாளிக்கிறது, ஆனால் சிக்கலான மற்றும் நீண்ட உரிமைகோரல் செயல்முறையுடன் போராடுகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். வலுவான உரிமைகோரல் தீர்வு விகிதம் மற்றும் திறமையான செயல்முறையுடன் கூடிய காப்பீட்டாளரைத் தேர்ந்தெடுப்பது முக்கியமான தருணங்களில் உங்களுக்கு கணிசமான மன அழுத்தத்தைக் குறைக்கும். மிகவும் முக்கியமான நேரங்களில் விரும்பத்தகாத ஆச்சரியங்களைத் தவிர்க்க, நெறிப்படுத்தப்பட்ட உரிமைகோரல் அமைப்புடன் காப்பீட்டாளர்களை ஆராயுங்கள்," என்று அகர்வால் பரிந்துரைக்கிறார்.