கடலூர்: கோவில் குளத்தில் புகுந்த முதலையை மீட்ட வனத்துறையினர்

15 hours ago
ARTICLE AD BOX

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி கிராமத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவிலின் குளத்தில் முதலை ஒன்று புகுந்ததாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், சுமார் 7 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த முதலையை அதே பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க ஏரியில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர்.


Read Entire Article