தாய்லாந்து முதல் அஜர்பைஜான் வரை.. விசா இல்லாமல் 12 நாடுகளில் என்ஜாய் பண்ணலாம்.. எப்படி?

4 hours ago
ARTICLE AD BOX

தாய்லாந்து முதல் அஜர்பைஜான் வரை.. விசா இல்லாமல் 12 நாடுகளில் என்ஜாய் பண்ணலாம்.. எப்படி?

Delhi
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியர்கள் உலகம் முழுவதும் விசா இல்லாமலும், பயணம் மேற்கொள்ள தாய்லாந்து முதல் அஜர்பைஜான் வரை 12 சுற்றுலா நாடுகள் அனுமதிக்கின்றனர். மலேசியா, மாலத்தீவு, தாய்லாந்து, கஜகஸ்தான் ,ஃபிஜி, அஜர்பைஜான், சீசெல்ஸ், பூடான், துருக்கி, ஹாங்காங், மொரிசியஸ், நேபாளம் போன்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் சுற்றுலா செல்ல முடியும்..

tour Indian Azerbaijan


மலேசியா

30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவில் பயணிக்கலாம். வானை நோக்கி உயர்ந்திருக்கும் கட்டிடங்களும், கடற்கரையும் கண்டிப்பாகபார்க்க வேண்டிய இடங்கள்.. உலகின் மிக உயரமான இரட்டை கோபுரங்களும் நவீன கால அதிசயமுமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் கோலாலம்பூர் மற்றும் மலேசியாவில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இருக்கிறது. இதேபோல் பத்துகுகைகள், தியன் ஹௌ கோயில், சுல்தான் அப்துல் சமத் கட்டிடம், கோலாலம்பூர் ரயில் நிலையம், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், சின் சே சி யா கோயில் என சொல்லிக்கொண்டே போகலாம்.

tour Indian Azerbaijan


தாய்லாந்து

60 நாட்கள் வரை விசா இல்லாமல் தாய்லாந்தில் இந்தியர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம்.. தாய்லாந்து குறித்து சொல்லவே தேவையில்லை.. அவ்வளவு இடங்கள் உள்ளது. கனவு உலகம் - பாங்காக் டிஸ்னிலேண்ட், பயோகே வான் ஆய்வகம், அயுதயா பகல் பயணம், கார்ட்டூன் நெட்வொர்க் கேளிக்கை பூங்கா, ஆங்தாங் தேசிய கடல் பூங்கா, பவள தீவு போன்ற பல இடங்கள் உள்ளன.

tour Indian Azerbaijan

மாலத்தீவுகள்

அரைவல் விசா மூலம் 30 நாட்கள் வரை மாலத்தீவுகளை சுற்றிப் பார்க்கலாம்.. உலகத்தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள், கடற்கரைகளில் ஒரு மணி நேரம் செலவிட்டாலும் போதும் ஆண்டு கணக்கில் அந்த நினைவுகள் மறையாது..

tour Indian Azerbaijan

கஜகஸ்தான்

14 நாட்கள் வரை விசா இல்லாமல் பயணிக்கலாம். கஜகஸ்தான் எப்படி இருக்கும் என்று சொல்வதை விட அங்கு போய் பார்ப்பது இன்னும் திரிலிங்காக இருக்கும்..

tour Indian Azerbaijan

ஃபிஜி

ஃபிஜி தீவினை பொறுத்தவரை 40 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க முடியும். கண்ணாடி போன்ற கடற்கரைகள் குறிப்பாக அவர்களின் விருந்தோம்பல் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும்.

tour Indian Azerbaijan

அஜர்பைஜான்

அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜான் நாட்டில் தான் எடுக்கப்பட்டது. அந்த படத்திற்கு பிறகு நிறைய பேர் அஜர்பைஜான் சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள்.. அஜர்பைஜானை பொறுத்தவரை வானுயுர்ந்த மலைகளும், இரவு நேரத்தில் ஜொலிக்கும் நகர் பகுதிகள் பார்க்கவே வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

tour Indian Azerbaijan

சீசெல்ஸ்

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சீசெல்ஸ் நாட்டில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம். மனதை கொள்ளை கொள்ளும் கடற்கரைகளை ரசிக்கவே கண்டிப்பாக போகலாம்.

tour Indian Azerbaijan

பூடான்

14 நாட்கள் வரை பூடான் நாட்டில் தங்க விசா தேவை இல்லை.. இமயமலை சாரலில் மன அமைதியை விரும்புவோர் நிச்சயம் அங்கு செல்ல வேண்டும்..

tour Indian Azerbaijan

துருக்கி

ஈ விசா மூலம் துருக்கி நாட்டிற்கு சென்று 30 நாட்கள்வரை தொந்தவு இல்லாமல் பயணிக்கலாம். பாரம்பரியமிக்க மலை முகடு, உற்சாகம் தரும் கடை வீதிகள், ஒரு முறை போய் வாருங்கள்.. பிறகு மறக்கவே மாட்டீர்கள்..

tour Indian Azerbaijan

ஹாங்காங்

இங்கு 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.. அங்குள்ள மார்க்கெட்டுகளை சுற்றி வருவதும், கூவ்லூனில் ஒளி மிகுந்த இரவுகளை ரசிப்பது தனி சுகம்..

tour Indian Azerbaijan

மொரிசியஸ்

அதிகபட்சமாக 90 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.. மனதை கொள்ளை கொள்ளும் கடற்கரைகள், பவளப்பாறைகள் நிறைந்த கடற்பரப்புகள், உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்..

tour Indian Azerbaijan


நேபாளம்

30 நாட்கள் வரை தங்க விசா தேவையில்லை.. பழமை வாய்ந்த கோவில்கள்.. வானுயர நிற்கும் மலைகளை காண கண் கோடி வேண்டும்..

tour Indian Azerbaijan
More From
Prev
Next
English summary
Indians can travel around the world without a visa, with 12 tourist countries from Thailand to Azerbaijan allowing them to travel without a visa. Countries like Malaysia, Maldives, Thailand, Kazakhstan, Fiji, Azerbaijan, Seychelles, Bhutan, Turkey, Hong Kong, Mauritius, Nepal, etc. can be visited without a visa.
Read Entire Article