தாய்ப்பால் கொடுக்குறப்ப 'இந்த' தவறை பண்ணாதீங்க!!  குழந்தைகளை இப்படி கவனிச்சுக்கங்க.. 

2 hours ago
ARTICLE AD BOX

தற்போது தனி குடும்பங்கள் பெருமளவில் உள்ளதால் இன்றைய காலகட்டத்தில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை எப்படி பராமரிப்பது என்று இளம் பெற்றோருக்கு ஒன்றுமே  தெரிவதில்லை. இதனால் குழந்தை பராமரிப்பில் அவர்கள் தங்களை அறியாமலே சில தவறுகளையும் செய்து விடுகிறார்கள். 

உண்மையில், குழந்தை வளர்ப்பு என்பது ரொம்பவே முக்கியமான பொறுப்பு. அதுவும் குறிப்பாக புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளை நன்றாக பராமரிப்பது ரொம்பவே முக்கியம் எனவே தாய் மற்றும் இன்றி தந்தையும் குழந்தையை பராமரிப்பதில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது குழந்தைக்கு டயப்பர் மாற்றுவது, இரவில் தூங்கும் போது அழுதால் அமைதிப்படுத்தி தூங்க வைப்பது உள்ளிட்ட பல விஷயங்களை தந்தையும் ஈடுபட வேண்டும். சரி இப்போது இளம் பெற்றோர்கள் பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பதில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்றது ஆபத்து..  குழந்தையோட ஆரோக்கியத்தையே பாதிக்கலாம்!! 

புதிதாக குழந்தையை பராமரிப்பதற்கான டிப்ஸ்:

1. புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரொம்பவே இறுக்கமான ஆடைகளை அணிவிக்க வேண்டாம். முக்கியமாக அவர்களுக்கு அணிவிக்கும் ஆடையில் பட்டன் மற்றும் கொக்கி போன்றவை இருக்கக் கூடாது. அவர்களுக்கு அசெளகரியமான ஆடைகளை மட்டுமே அணிவிக்க வேண்டும். குழந்தைகளின் ஆடை அவர்களது சருமத்தை அழுத்தவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

2. பொதுவாக புதிதாக பிறந்த குழந்தையை பார்ப்பதற்கென வீட்டிற்கு நண்பர்கள், உறவினர்கள் வருவார்கள். அவர்கள் எல்லாரிடமும் குழந்தையை கொடுக்க வேண்டாம். ஏனெனில் பலரது கைகள் குழந்தை மீது படும் போது அவர்களது உடல் சூடானது குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகும். இதனால் குழந்தைக்கு பல தொற்று நோய்கள் உருவாகும். எனவே அவர்கள் வந்தால் குழந்தையை தள்ளி நின்று பார்க்க சொல்லுமாறு சொல்லவும். இதை நீங்கள் கண்டிப்புடன் சொன்னால் கூட தவறில்லை.

3. குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரும் குழந்தையை தூக்கும் போது கைகளை நன்றாக கழுவி பிறகு தான் குழந்தையை தூக்க வேண்டும்.

4. புதிதாகப் பிறந்த குழந்தை அதிக நேரம் தூங்கும். ஆனால் அதிக நேரம் குழந்தையை தூங்க விட வேண்டாம். அது தவறு. 

5. மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை ஒருபோதும் எழுப்பி பால் கொடுக்க வேண்டாம். குழந்தை தூங்கி எழுந்ததும் பால் கொடுக்கலாம். குழந்தை பிறந்து முதல் சில வாரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுங்கள்.

6. சிலர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு உடனே தொட்டிலில் போட்டு விடுவார்கள். ஆனால் அது தவறு. மாறாக குழந்தை பால் குடித்து முடித்த பிறகு உங்களது தோளில் குழந்தையை போட்டு குழந்தையின் முதுகை தட்டி விடுங்கள் குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை காத்திருக்கவும். அப்படி வரவில்லை என்றால் குழந்தை வயிற்று வலியால் அழும் அல்லது கக்கும்.

7. குழந்தைக்கு பாலூட்டிய பிறகு அப்படியே விட்டு விடாமல் குழந்தையின் உதட்டை ஒரு மென்மையான ஈரமான துணியை கொண்டு துடைத்து விடுங்கள்.

8. குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை கண்டிப்பாக தாய்பாலூட்ட வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. பசும்பால், பாக்கெட் பால், செர்லாக் போன்றவற்றை ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.

9. குழந்தையின் உடல் சூடு அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுக்கவும் இல்லை எனில் குழந்தைக்கு ஜன்னி வந்துவிடும்.

10. குழந்தை தூங்கும் போது மற்றும் குளிக்க வைக்கும் போது ரொம்பவே கவனமாக இருங்கள். ஏனெனில் குழந்தையின் தலை மூன்று மாதத்திற்கு பிறகு தான் சரியாக இருக்கும். எனவே குழந்தையை பராமரிக்கும் போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். 

இதையும் படிங்க:  குழந்தையை குளிப்பாட்டும்போது இந்த '4' விஷயத்தை செய்ய மறக்காதீங்க!!

குறிப்பு : பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் சரி பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தையின் முன் ஒருபோதும் சண்டை போட கூடாது. அது குழந்தையின் மூளையில் எதிர்மறையாக பாதிக்கும்.

Read Entire Article