ARTICLE AD BOX
Vastu Tips : இந்த பொருட்களை திறந்து வைத்தால் வறுமையும், துயரமும் உங்கள் வீட்டில் குடிகொள்ளும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.

வாஸ்து சாஸ்திரம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நபரின் வாழ்வில் வாசு சாஸ்திரம் முக்கியத்துவம் உயர்ந்த முறையில் சொல்லப்பட்டுள்ளது. எந்தவொரு வேலையும் செய்வதற்கு முன்போ அல்லது செய்யும்போதோ வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்றினால் அதற்குரிய பலன்கள் மிகவும் மங்களகரமானதாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை புறக்கணித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பற்றி சொல்லப் போகிறோம். அவற்றை நீங்கள் தவறுதலாக கூட உங்களது வீட்டில் திறந்து வைக்கவே கூடாது. அவற்றில் ஏதேனும் ஒன்றே நீங்கள் திறந்து வைத்தால் கூட உங்களது வீட்டில் விரைவில் வறுமையும், துயரமும் அதிகரிக்கும். எனவே அது என்னென்ன பொருட்கள் என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் புத்தகங்களை படித்த உடனையே அவற்றை மூடிவிடுங்கள். ஒருவேளை புத்தகம் படித்தபடியே திறந்து வைப்பது தவறு என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. வேதங்களின்படி, புத்தகங்கள் புதனுடன் தொடர்புடையதால், அது புத்திசாலித்தனம் மற்றும் பேச்சின் காரணியாகவும் அறியப்படுகின்றது. எனவே உங்களது வீட்டில் ஒருபோதும் புத்தகங்களை திறந்து வைக்க வேண்டாம். மீறினால், புதன் பலவீனம் ஆகிவிடும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி உப்பை பயன்படுத்திய பிறகு நீங்கள் ஒருபோதும் அதை திறந்து வைக்க வேண்டாம். ஏனெனில் உப்பு சந்திரனுடன் தொடர்புடையது நீங்கள் உப்பு டப்பாவை திறந்து வைக்கும் போது அது சந்திரனை பலவீனப்படுத்துகிறது. உங்களது ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால் திங்கள்கிழமை உப்பு தானம் செய்யலாம்.
இதையும் படிங்க: Vastu Tips : வீட்டில் அடிக்கடி சண்டையா? அமைதி நிலவ கல் உப்பை 'இந்த' இடத்தில் வைங்க!!

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஒருபோதும் பால் பாத்திரத்தை திறந்து வைக்க கூடாது. அப்படி பால் பாத்திரம் திறந்து இருந்தால் உங்களது ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் உடல்நலம் மற்றும் நிதி அடிப்படையில் இழப்புகளை நீங்கள் மோசமாக சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: வீடு துடைக்குறப்ப 'இந்த' தப்ப பண்றீங்களா? அப்ப வீட்டுக்கு துரதிஷ்டம் தான் வரும்!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது வீட்டில் உணவு பொருட்களை திறந்து வைக்க கூடாது. இப்படி செய்வது தவறு ஒருவேளை அப்படி திறந்திருந்தால் உணவு மற்றும் பணம் இரண்டிலும் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். மேலும் திருந்திருந்த உணவில் பூச்சிகள், தூசிகள் விழும் இதனால் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

தவறுதலாக கூட வீட்டில் இருக்கும் அலமாரியை ஒருபோதும் திறந்து வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அப்படி ஒருவேளை திறந்து இருந்தால் லட்சுமிதேவி உங்கள் மீது கோபப்படுவாள். அதுமட்டுமின்றி அலமாரி தெரிந்திருக்கும் வீட்டில் வறுமை நிச்சயம் பெருகும்.