ARTICLE AD BOX
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிக வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகையால், அந்த அரசு பல உத்தரவுகளை இட்டு வருகிறது.
உலகம் முழுவதும் சீரற்ற காலநிலை இருந்து வருகிறது. அதிக வெப்பம் அதிக குளிர் என மாற்றி மாற்றி மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்தியாவிலும் வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. இப்போதே மக்களை வாட்டி வதைக்கிறது.
இதேபோல்தான் பிலிப்பைன்ஸிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பத்தின் காரணமாக மக்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அந்த மக்களை காக்கும் விதமாக அந்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்களின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் பிலிப்பைன்ஸ் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அதாவது ஆன்லைன் க்ளாஸ் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், பணிக்கு செல்வோரும் வீட்டிலிருந்து வேலைப் பார்க்கிறார்கள்.
மேலும் சில அட்வைஸ் கொடுத்துள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கூல்டிரிங்ஸ் போன்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 242 மில்லியன் குழந்தைகள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் 2.8 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.