ARTICLE AD BOX
2024 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா 4 அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.
அதிக சிக்சர்கள் அடித்து சாதனை..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் 39 மற்றும் 61 ரன்கள் அடிக்க, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை 264 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி அதிரடியாக தொடங்கினார். இந்த சிக்சர் அடித்ததன் மூலம் ஐசிசி தொடர்களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக மாறி புதிய வரலாறு படைத்தார் ஹிட்மேன்.
இதற்குமுன் ஐசிசி தொடர்களில் 64 சிக்சர்களை விளாசியிருக்கும் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் இருந்த நிலையில், அதனை முறியடித்து 65 சிக்சர்களுடன் முன்னிலை பெற்றுள்ளார் ரோகித் சர்மா.
ஐசிசி தொடர்களில் அதிக சிக்சர்கள்:
* ரோகித் சர்மா - 65 சிக்சர்கள் - 42 இன்னிங்ஸ்கள்
* கிறிஸ் கெய்ல் - 64 சிக்சர்கள் - 51 இன்னிங்ஸ்கள்
* க்ளென் மேக்ஸ்வெல் - 48 சிக்சர்கள் - 29 இன்னிங்ஸ்கள்
* டேவிட் மில்லர் - 45 சிக்சர்கள் - 30 இன்னிங்ஸ்கள்
இரண்டாவதாக பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது.