ARTICLE AD BOX
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே தங்களை அழகாக வைத்துக்கொள்ள பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டிவி விளம்பரங்களில் வரும்ஃபேஸ் க்ரீம்கள் உள்ளிட்ட பலவையான க்ரீம்களையும் பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. அதே சமயம் இயற்கையில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே முகத்தின் அழகை பராமறிக்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அந்த வகையில்,நடிகை குஷ்பு பயன்படுத்தி வரும் கேரட் எண்ணெய் எப்படி செய்வது, இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் ஒரு கேரட்டை எடுத்து அதன் தோலை லேசாக சீவிவிட்டு, பீட்ரூட் சீவும் சீவலில் வைத்து நன்றாக சீவி எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து, எண்ணெய் கொதிக்கும்போது, கேரட் துருவலை அதில் சேர்த்து கருகிவிடாத வகையில், கிளறிக்கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் கோல்டன் கலருக்கு வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்துவிடவும்.
அதன்பிறகு எண்ணெய்யை தனியாக பிரித்து எடுத்து சூடு ஆறியவுடன், அதில், ஆல்மெண்ட் ஆயில், ஆலிவ் ஆயில், சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த எண்ணெய்யை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்துகொள்ளவும். உங்கள் முகம் ஆயில் ஸ்கின்னாக இருந்தால் இந்த எண்ணெய்யை தவிர்த்துவிடுவது நல்லது.
ட்ரை ஸ்கின்னாக இருந்தால் இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தும்போது அதிக பலன் கிடைக்கும் முகம் பொலிவாக இருக்கும்.