தாத்தா என்று கூப்பிட வேண்டியவரை அப்பா என்று கூப்பிடுகிறார்கள்..? – TTV தினகரன் கிண்டல்

2 days ago
ARTICLE AD BOX

மாணவிகளெல்லாம் என்னைப் பார்த்து அப்பா, அப்பா என்று அழைக்கக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான செய்தியை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த அளவிற்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். முதலமைச்சர் கூறியதை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர். அநத நிலையில், தற்போது டிடிவி தினகரனும் விமர்சித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது, தாத்தா என்று கூப்பிட வேண்டியவரை அப்பா என்று கூப்பிடுகிறார்கள்? 70 வயசுல தாத்தா என்றுதான் கூப்பிடுவார்கள். அவரை அப்பா என்று கூப்பிடுவதாக அவரே பேசிக்குறாரு. கெட் அவுட் டிம்கே என்றுதான் வரப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.. அதுதான் உண்மை. 2026 சட்டமன்ற தேர்தலில் கெட் அவுட் டிஎம்கே என்றுதான் வரும். அதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Read more : SBI வங்கியில் வேலை.. 80 ஆயிரம் வரை சம்பளம்.. உடனே அப்ளிகேஷனை போடுங்க..!!

The post தாத்தா என்று கூப்பிட வேண்டியவரை அப்பா என்று கூப்பிடுகிறார்கள்..? – TTV தினகரன் கிண்டல் appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article