ARTICLE AD BOX
தவெகவின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்கிறார்.
கட்சியின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் இரண்டு முறை ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் தற்போது முதல்முறையாக தவெக நிகழ்ச்சியிலும் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காசி விஸ்வநாதர் கோயிலில் 3 நாள்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!
மாவட்ட வாரியாக குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகம் கூறப்படுகிறது.
விஜய்-க்கு பாதுகாப்பு வழங்குவது, அவா் வந்து செல்வதற்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்டவற்றை கட்சியின் பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த் அண்மையில் ஆய்வு செய்தாா்.
அனுமதிச் சீட்டு இல்லாதவா்கள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.