தலைமுடிக்கு தக்காளி ஹேர் மாஸ்க்… எப்படி பயன்படுத்துவது?

2 hours ago
ARTICLE AD BOX

முகத்திற்கு தக்காளி பயன்படுத்தி பார்த்திருப்போம். ஆனால், முடிக்கும் தக்காளி பயன்படுத்தலாம். இது பெரிய அளவு நன்மையை கொடுக்கும்.

முகச்சருமத்தைப் பராமரிக்கும் அதே அளவு கூந்தலையும் பராமரிக்க வேண்டும். அப்படி தலைமுடியை பராமரிக்க உதவும் சில பொருட்களில் ஒன்று தக்காளி. தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்றவை கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பண்புகளை கொண்டுள்ளன. இது தலைமுடியை பளபளப்பாக வைத்துக்கொள்வதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டச் செய்யும். ஆரோக்கியமான கூந்தலுக்கு தக்காளி ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம்.

தக்காளி ஹேர் மாஸ்க் செய்யும் முறைகள்:

பழுத்த தக்காளி – 3

தேன் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

முதலில் தக்காளியை நன்றாக அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ்: பிரட் வெஜ் கட்லெட் மற்றும் சோயா கட்லெட் ரெசிபி!
Tomato hair mask

இதனை உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் தேய்த்து ஊற வைக்கவும். குறைந்தது பத்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் இதை அப்படியே விட்டு பின்னர் மிதமான நீரில் கூந்தலை அலசிக் கொள்ளவும்.

இதன்மூலம் பொடுகு அரிப்பு தொல்லைகள் நீங்கும்.

அதேபோல், பழுத்த தக்காளி ஒன்றை அரைத்து ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கூட சேர்த்துக் கொள்ளலாம். இதனை தலை மற்றும் கூந்தலில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் தலைமுடியை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி?
Tomato hair mask

அடுத்ததாக 2 தக்காளியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொண்டு ( நீர் சேர்த்து அரைக்க வேண்டாம்) இந்த பேஸ்டுடன் தேங்காய் எண்ணெயை சற்று சூடாக்கி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இந்த கலவையை கூந்தலில் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் பின்னர் கழுவவும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வரலாம்.

இந்த மூன்று முறைகளில் ஏதோ ஒன்றை வாரம் ஒருமுறை செய்து வர, முடி ஆரோக்கியமாக இருக்கும்.

Read Entire Article