ARTICLE AD BOX
சென்னை: தயாரிப்பாளர் தாணுவின் மனைவி இறந்தபோது 4 மணி நேரம் தெருவில் காத்திருந்தார் அஜித். இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பேட்டியில் அஜித் குறித்து தாணு பேசும்போது, ‘‘2001ம் ஆண்டு எனது மனைவி சிங்கப்பூர் சென்றபோது இறந்துவிட்டார். எனது மனைவி இறந்த செய்தி கேட்டதும் அன்று இரவே அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டில் நாங்கள் இல்லை.
காரணம் நாங்கள் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறோம். வீட்டிற்கு வந்த அஜித் நாங்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக, ஷாலினியுடன் நடுத்தெருவில் அவர்கள் வந்த காரில் காத்துக் கொண்டு இருந்தார்கள். மற்ற நடிகர்கள் இப்படி காத்துக் கொண்டு இருப்பார்களா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அஜித் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கொண்டு இருந்தது என்னை நெகிழ்ச்சி அடையச் செய்துவிட்டது’’. இவ்வாறு தாணு கூறியுள்ளார்.