ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் நடக்கும் மிகப்பெரிய விஷயம்.. சத்தமில்லாமல் துவங்கிய TRB ராஜா..!!
தமிழ்நாடு பல துறையில் சிறந்து விளங்கி வந்தாலும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அடுத்த 10 -20 வருடத்திற்கு கவனம் செலுத்த வேண்டிய ஒரு துறையை கண்டறிய வேண்டியது அவசியம். இதுதான் மாநிலத்தின் பொருளாதாரம், தனிநபர் வருமான வளர்ச்சிக்கு நீண்ட கால அடிப்படையிலான அடித்தளம் அமைக்கும் விஷயமாக இருக்கும்.
அந்த வகையில் தமிழ்நாட்டின் தொழில்துறையில் ஒரு முக்கியமான பாதையை நோக்கி நகர்ந்து வருகிறது. ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையப்போகும் "ஏரோஸ்பேஸ் அண்ட் டிஃபென்ஸ் மீட்டிங்ஸ் சென்னை (ADM சென்னை)" மாநாடு, இந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் லோகோவை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.

விமானம் மற்றும் டிபன்ஸ் உற்பத்தி துறையில் தமிழ்நாடு முன்னணி மையமாக மாற்றும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள், சிறிய விமானங்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கை கோள்களை ஏவும் ராக்கெட்கள், விண்வெளி ஆய்வுக்கான உதிரிபாகங்கள், விண்வெளி நிலையங்களுக்கு தேவையான உபகரணங்கள், அதேபோல டிபன்ஸ் துறையில் போர் விமானங்கள், சரக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள், ராக்கெட்கள், வெடி பொருட்கள், ராணுவ வாகனங்கள் போன்றவற்றை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.
"ஏரோஸ்பேஸ் அண்ட் டிஃபென்ஸ் மீட்டிங் சென்னை" மாநாட்டை, விமானம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பிடுபி நிகழ்வுகளை நடத்தும் உலகளாவிய முன்னணி நிறுவனமான BCI ஏரோஸ்பேஸுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், சர்வதேச மற்றும் இந்திய நிறுவனங்களை ஒன்றிணைத்து வணிக வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய பங்கேற்பாளர்களாக OEMகள் இருப்பார்க். OEM என்றால் ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுஃபேக்சரர்கள். உதாரணமாக விமானம், ராணுவ தளவாடங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் இவை.
அடுத்ததாக சப்ளையர்கள். உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து உதிரிபாகங்களைப் பெற்று சேவை வழங்கும் நிறுவனங்கள். அடுத்ததாக பல்வேறு துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியோர் இந்த மாநாட்டின் முக்கிய பங்கேற்பாளராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ADM சென்னை, இந்தியாவின் நடைபெறும் முதல் மாநாடு ஆகும். இது வானூர்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் கடற்படை ஆகிய துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் அமைப்பாக இருக்கும். இந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களை ஒன்றிணைத்து, வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 25க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன. 8,000க்கும் மேற்பட்ட முன் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த மாநாடு, வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியில் தமிழ்நாட்டின் உலகளாவிய மையமாக மாற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு நடத்தப்படுகிறது.
அதிலும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில் துறைக்குள் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர முடியும். இதனால் புது நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாகும். அதோடு லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் வாய்ப்புள்ளது.