தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு செக்… புதிய கட்டுப்பாடுகள்… பறந்தது முக்கிய உத்தரவு…!!!

3 hours ago
ARTICLE AD BOX

மாநில அரசு ஊழியர்களுக்காக 1973-ஆம் ஆண்டு நடத்திய விதிகள் உருவாக்கப்பட்டது. அதில் திருத்தம் செய்து தமிழக அரசு புதிய விதிகளை வெளியிட்டது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் எந்த வகையிலும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், சங்க பொறுப்பாளர்கள், தங்கள் கருத்துக்களை கூறலாம். எந்த ஒரு அரசு ஊழியரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது. அதற்கான தூண்டுதல்களில் ஈடுபடவும் கூடாது.

அனுமதி இன்றி வேலைக்கு செல்லாமல் இருப்பதும் கடமைகளை புறக்கணிப்பதும் போராட்டமாக கருதப்படும்.  இதனையடுத்து அனுமதி இன்றி அரசு அலுவலக வளாகத்திலோ, அதனை ஒட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக்கூடாது. விதிகளை மீறி அந்த கூட்டத்தில் உரையாற்றக்கூடாது என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article