ARTICLE AD BOX
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பி.ராஜாணிக்கம் ஏற்கனவே தமிழ்நாடு லோக் ஆயுக்தா பொறுப்பு தலைவராக பதவி வகித்து வரும் நிலையில், அவரை தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் பிரகாஷ் அரசாணையை பிறப்பித்துள்ளார். மேலும், நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவரான முனைவர் வி.ராமராஜ் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான வழக்கறிஞர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோரையும் தமிழ்நாடு அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜமாணிக்கத்தின் நீதித்துறை உறுப்பினர் மற்றும் தலைவர் ஆகியவற்றின் மொத்த பதவி காலமான 5 ஆண்டுகள் என்பது 2027 ஏப்ரல் 17ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் வரை அவர் தலைவராக பதவி வகிப்பார் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் வி.ராமராஜ் மற்றும் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் 5 ஆண்டு காலத்திற்கோ அல்லது 70 வயது நிறைவடையும் வரையில் பதவியில் இருப்பார்கள் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமித்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.