ARTICLE AD BOX
புதுடெல்லி,
2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தின் ரூ.1,554.99 கோடி கூடுதலாக வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான உயர்நிலைக்குழு அளித்துள்ளது.
இந்த நிதி உதவியில் ஆந்திர பிரதேசத்துக்கு ரூ.608.08 கோடியும், நாகாலாந்துக்கு ரூ.170.99 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.255.24 கோடியும், தெலுங்கானாவுக்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவுக்கு ரூ.288.93 கோடியும் கிடைக்கும்.
இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக குறிப்பிட்ட 5 மாநிலங்களுக்கு மட்டுமே கூடுதல் நிதி அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்த நிதி ஒதுக்கீட்டில் கொஞ்சம்கூட ஒதுக்கவில்லை. இதைப்போல வயநாடு பேரிடர் பாதிப்புக்காக கேரள மாநிலத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.