ARTICLE AD BOX

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இம்மாதம் (பிப்ரவரி) முதலே வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது காலை நேரங்களில் பனி பெய்வதும், மதியம் வெயில் கொளுத்துவதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று(21-02-2025) முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ், 23, 24-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 6 நாட்கள் வெயில் அதிகரிக்கக்கூடும்- வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்…! appeared first on Rockfort Times.